Ragas in Film Music
Presented in this BLOG are some movie songs composed in the same RAGA, which will help getting an idea of how a raga sounds. It is aimed at providing an introduction to CARNATIC MUSIC.
Thursday, June 8, 2023
Friday, February 17, 2023
Thursday, January 27, 2022
KANNA NEE THOONGU DA - BAAHUBALI 2
படம்: பாகுபலி 2
பாடல்: மதன் கார்க்கி
இசை: மரகதமணி
குரல்: நயனா நாயர்
முறைதானா முகுந்தா………
சாிதானா சனந்தா
முறைதானா முகுந்தா
சாிதானா சனந்தா (2)
பூவையா் மீது கண்
மேய்வது முறையா பாவை
என் நெஞ்சம் தினம் தேய்கின்ற பிறையா
போதுமே நீ கொஞ்சம் துயில் கொள்ளடா
கண்ணா நீ தூங்கடா
என் கண்ணா நீ தூங்கடா
உன் விரலினில்
மலை சுமந்தது போதுமே
கண்ணா நீ தூங்கடா
என் கண்ணா நீ தூங்கடா
உன் இதழினில்
குழல் இசைத்தது போதுமே
கண்ணா நீ தூங்கடா
என் கண்ணா நீ தூங்கடா
கண்ணா நீ தூங்கடா
என் கண்ணா நீ தூங்கடா
கோபியா் குளிக்கையிலே
உடைகள் திருடி கலைத்தாய்
ஓய்வெடு மாயவனே
பானையில் வெண்ணையினை
தினமும் திருடி இழைத்தாய்
தூங்கிடு தூயவனே
சா…………………………மனா………
மோ…………………………கனா………
போதும் கண்ணா நீ
செய்யும் திருட்டு வானம்
எங்கும் சூழ்ந்தது இருட்டு
மாா்பில் சாய்ந்து கண் மூடடா
கண்ணா நீ தூங்கடா
என் கண்ணா நீ தூங்கடா
கண்ணா நீ தூங்கடா
என் கண்ணா நீ தூங்கடா
சோலையின் நடுவினிலே
மயங்கி கிரங்கி கிடந்தேன்
நான் உனதழகினிலே
மயங்கி கிரங்கி கிடந்தேன்
தான் உனதழகினிலே
மா……………………தவா……………
யா……………………தவா…………
லீலை செய்தே என்னை
நீ கவிழ்க்க காளை மோதி
உன்னையும் கவிழ்க்க
காயம் என்னால் கொண்டாயடா
கண்ணா நீ தூங்கடா
என் கண்ணா நீ தூங்கடா
கண்ணா நீ தூங்கடா
என் கண்ணா நீ தூங்கடா
முறைதானா முகுந்தா
சாிதானா சனந்தா (2)
மாதனா மதுசூதனா
மனோகரா மணிமோகனா
மாதனா மதுசூதனா
மனோகரா மணிமோகனா
முறைதானா முகுந்தா
சாிதானா சனந்தா
கண்ணா.. கண்ணா..
கண்ணா.. கண்ணா..
ஆனந்த அனிருதா
ஆனந்த அனிருதா
கண்ணா
கண்ணா கண்ணா
கிருஷ்ணா ராதா
ரமணா கிருஷ்ணா
கண்ணா நீ தூங்கடா
Sunday, April 5, 2020
KANNUKUL POTHI VAIPPEN - THIRUMANAM ENUM NIKKAH
படம்: திருமணம் எனும் நிக்காஹ்
வரிகள்: பார்வதி
கண்ணுக்குள் பொத்திவைப்பேன்
என் செல்லக் கண்ணனே வா
தி தித்த தை ஜதிக்குள்
என்னோடு ஆட வா வா
அடிக்கடி உனைப்பிடிக்க நான் மன்றாடிட
இடப்புறம் விரல் மடக்கி நீ டூ காட்டிட
என் கண்ணனே வாடா வா
விஷமக் கண்ணனே வாடா வா
கண்ணுக்குள் பொத்திவைப்பேன்
என் செல்ல கண்ணனே வா
தி தித்த தை ஜாதிக்குள்
என்னோடு ஆட வா வா
அடிக்கடி உனைப்பிடிக்க நான் மன்றாடிட
இடப்புரம் விரல் மடக்கி நீ டு காட்டிட
என் கண்ணனே வாடா வா
விசம கண்ணனே வாடா வா
சிறு சிட்டிகை பாசம்
பெரும் கடலாய் மாற
மணித்துளி எல்லாமே
அரை நொடிக்குள் தீர
மழைத்தறியா உள்ளம்
பிசுபிசுப்பை பேண
எதற்கடி திண்டாட்டம்
கதகதப்பை காண
நீ ராதை இனம்
சொல்லாமல் சொன்னாயே
செங்கோதை மனம்
உன் பேச்சில் தந்தாயே
உன்னாலே யோசிக்கிறேன்
உன் விரலை பிடித்து
நடக்கும் நிமிடம் யாசிக்கிறேன்
கண்ணுக்குள் பொத்திவைப்பேன்
என் செல்லக் கண்ணனே வா
தி தித்த தை ஜதிக்குள்
என்னோடு ஆட வா வா
அடிக்கடி உனைப்பிடிக்க நான் மன்றாடிட
இடப்புறம் விரல் மடக்கி நீ டூ காட்டிட
என் கண்ணனே வாடா வா
விஷமக் கண்ணனே வாடா வா
உயிர் எதையோ தேடும்
மனம் அதையே நாடும்
தனித்தனியே ரெண்டும்
ஒரு வழியில் ஓடும்
எது எதற்கோ பொய்கள்
எதிர் எதிராய் மெய்கள்
எது எதுவாய் ஆகும்
விடை கடந்தே போகும்
கண்ணாடி முனை போல் எண்ணங்கள் கூராய்
முன் இல்லாததை போல் எல்லாமே வேறாய்
உன்னாலே பூரிக்கிறேன்
உன் சிரிப்பு சரத்தில்
மகிழ மரத்தில்
பூ தைக்கிறேன்
கண்ணுக்குள் பொத்திவைப்பேன்
என் செல்லக் கண்ணனே வா
தி தித்த தை ஜதிக்குள்
என்னோடு ஆட வா வா
அடிக்கடி உனைப்பிடிக்க நான் மன்றாடிட
இடப்புறம் விரல் மடக்கி நீ டூ காட்டிட
என் கண்ணனே வாடா வா
விஷமக் கண்ணனே வாடா வா
Monday, December 25, 2017
PANAME UNNAL ENNA GUNAME - SANJAY
பல்லவி
பணமே உன்னாலென்ன குணமே - தண்டம்
பண்ணினேன் சற்றுமென் கண்ணின் முன்னில்லாதே
அனுபல்லவி
மணமில்லா மதமோகம் குரோதம் துன்மார்க்கமும்
மூர்க்கமும் யார்க்குமே போதிக்கும் - பணமே
சரணம்
தேடியுனை வைத்து மூடியவர்க்கு நீ
தீர்க்காயுசு தருவாயோ - இனி
நாடி யமன் வந்து சாடும்போது நீ
நானென்று முன் வருவாயோ
கூடிய பேர்கள் குடியைக் கெடுப்பாயே
கொல்லச்சொல்லி பின்னும் காட்டிக்கொடுப்பாயே
ஓடிஓடி அற்பரைப் போய் அடுப்பாயே
உத்தமரைக் கண்டால் ஓட்டமெடுப்பாயே