காமாக்ஷி கருணாவிலாசினி
காமகோடி பீடவாசினி சஞ்சீவனி
காமகோடி பீடவாசினி
மந்தஹாசினி மதுரபாஷனி
சந்த்ரலோசனி சாபவிமோசனி
பவதாரணி பரிபூரணி
சகலலோக சௌக்யதாரணி சஞ்சீவனி
காமகோடி பீடவாசினி
க்ருஷ்ணசோதரி கனகசுந்தரி
திவ்யமஞ்சரி தேவமனோஹரி
பரமேஸ்வரி பஞ்சாக்ஷரி
அனந்தஞான அம்ருதசாகரி சஞ்சீவனி
காமகோடி பீடவாசினி