Tuesday, March 10, 2009

MAAPILLAIKU - NETRIKANN


மாப்பிள்ளைக்கு மாமன் மனசு 
மாமனுக்கோ காமன் மனசு 
புதிய ஒரு ஜோடி பொருத்தம் பல கோடி 
பருவ வயது கடந்த பிறகும் துடிக்கிற 


மாப்பிள்ளைக்கு மாமன் மனசு 
மாமனுக்கோ காமன் மனசு 

நடந்த வரை வயசுக்கு பொருத்தமில்லை  
நடக்கும் கதை மனசுக்கு அமைதி இல்லை 
விதைத்த விதை முளைத்தது மாறவில்லை 
விதைத்து விட்டுத் துடிப்பதில் லாபமில்லை 
தசரதா புரிந்ததா 
ஹரிகதா தெரிந்ததா 
எனக்கும் உனக்கும்  
புரிந்தவரையில் புரியட்டும் 

மாப்பிள்ளைக்கு மாமன் மனசு 
மாமனுக்கோ காமன் மனசு 

கற்றவர்கள் எழுதிய கவிதையிலும் 
மற்றவர்கள் குறைகளைக் காண்பதுண்டு 
குற்றமெனச் சொன்னது சொன்னதுதான் 
நெற்றிக் கண்ணைத்  திறந்தவன் கண்டதுதான் 
சிவனிடம் துணிந்தவன் 
எவனிடம் அஞ்சுவான் 
உலகம் முழுதும் 
அறிந்த கதைக்கு விளக்கமா?

மாப்பிள்ளைக்கு மாமன் மனசு 
மாமனுக்கோ காமன் மனசு 
புதிய ஒரு ஜோடி பொருத்தம் பல கோடி 
பருவ வயது கடந்த பிறகும் துடிக்கிற 


மாப்பிள்ளைக்கு மாமன் மனசு 
மாமனுக்கோ காமன் மனசு 



No comments: