கண்ணன் மனநிலையைத் தங்கமே தங்கம்
கண்டுவர வேணுமடி தங்கமே தங்கம்
எண்ணம் உரைத்துவிடில் தங்கமே தங்கம்
பின்னர் ஏதெனிலும் செய்வோமடி தங்கமே தங்கம்
ஆற்றங் கரையதனில் முன்னமொரு நாள் எனை
அழைத்து தனியிடத்தில் பேசியதெல்லாம்
தூற்றி நகர்முரசு சாற்றுவேனென்று
சொல்லி வருவாயடி தங்கமே தங்கம்
நேரமுழுதினும் அப் பாவி தன்னையே
உள்ளம் நினைந்து மருகதடி தங்கமே தங்கம்
தீர ஒரு சொல்லின்று கேட்டு வந்திட்டால் பின்பு
தெய்வம் இருக்கதடி தங்கமே தங்கம்
கண்ணன் மனநிலையைத் தங்கமே தங்கம்
கண்டுவர வேணுமடி தங்கமே தங்கம்
No comments:
Post a Comment