Monday, December 25, 2017

PANAME UNNAL ENNA GUNAME - SANJAY




பல்லவி

பணமே உன்னாலென்ன குணமே - தண்டம்
பண்ணினேன் சற்றுமென் கண்ணின்  முன்னில்லாதே

அனுபல்லவி

மணமில்லா மதமோகம் குரோதம் துன்மார்க்கமும்
மூர்க்கமும் யார்க்குமே போதிக்கும் - பணமே

சரணம்

தேடியுனை வைத்து மூடியவர்க்கு நீ
தீர்க்காயுசு தருவாயோ - இனி
நாடி யமன் வந்து சாடும்போது நீ
நானென்று முன் வருவாயோ
கூடிய பேர்கள் குடியைக் கெடுப்பாயே
கொல்லச்சொல்லி பின்னும் காட்டிக்கொடுப்பாயே
ஓடிஓடி அற்பரைப் போய் அடுப்பாயே
உத்தமரைக் கண்டால் ஓட்டமெடுப்பாயே