Saturday, September 22, 2012

SINDHU NADHI KARAI - NALLADHORU KUDUMBAM



சிந்து நதிக்கரையோரம் 
அந்தி நேரம்
எந்தன் தேவன் ஆடினான்
தமிழ் கீதம் பாடினான்
எனைப்  பூவைப் போல சூடினான்

சிந்து நதிக்கரையோரம்
அந்தி நேரம்
எந்தன் தேவி ஆடினாள்
தமிழ் கீதம் பாடினாள்
எனைப் பூவைப் போல சூடினாள் 

மஞ்சள் மலர்ப் பஞ்சணைகள்
மன்மதனின் மந்திரங்கள்
கொஞ்சும் குயில் மெல்லிசைகள்
கோதை எந்தன் சீர்வரிசை
சொல்லிக் கொடுத்தேன் கதை கதை
அள்ளிக் கொடுத்தாய் அதை அதை
காதல் கண்ணம்மா 

தெள்ளுத் தமிழ் சிலம்புகளை
அள்ளி அவள் அணிந்து கொண்டாள்
கள்ளிருக்கும் கூந்தலுக்கு
முல்லை மலர் நான் கொடுத்தேன்
வானவெளியில் நிதம் நிதம் (இதம் இதம் )
சோலை வெளியில்  சுகம் சுகம்
காதல் மன்னவா 

சிந்து நதிக்கரையோரம்
அந்தி நேரம்..



Sunday, September 9, 2012

DEVA SABHA THALAM - HIS HIGHNESS ABDULLAH







HINDOLAM, TODI, PANTHUVARALI, ABHOGI, MOHANAM, SHANMUKA PRIYA, KALYANI, CHAKRAVAHAM,  REVATHI.

Thursday, September 6, 2012

SADHA SADHA UNNAI - RAMANA MALAI



SONG STARTS @15:50

சதா சதா உன்னை நினைந்து நினைந்து
உன்னில் கலந்திடவே அருள்வாய் ரமணா 
சதா சலித்துச்சளைத்த மனதினிலே
சதாசிவா என்றுனை  ஓர் நொடிப்பொழுதும் இடைவிடாது 

சதா சதா உன்னை நினைந்து நினைந்து
உன்னில் கலந்திடவே அருள்வாய் ரமணா 

காம க்ரோத மத மாச்சரியமும் 
என்னை விட்டு விலகிடவும்
சாம கான திருவாசகம் 
என் நாவில் துலங்கிடவும் 
நின் திருமலர்ப் பதம் 
என் சிரமதில் திகழ்ந்திட 
குருவருள் துணைவர
திருவருள் தனைப்பெற 

சதா சதா உன்னை நினைந்து நினைந்து
உன்னில் கலந்திடவே அருள்வாய் ரமணா 

அதா இதா எனச்சென்றது எத்தனை ஆலயங்கள்
இதா அதா  எனச்சொன்னது எத்தனை மந்திரங்கள் 
ஆழியின் அலை போல அலைதனில் நுரை போல
அலைந்து அலைந்து மனம் கலைந்து குலைந்து
நிலை கலங்கி தினம் தவிக்குதே 

தொலைவினில் தெரிந்திடும் கலங்கரை விளக்கே 
அருகினில் ஒளி வீசு நீ இருக்கும் கரை சேர 

சதா சதா உன்னை நினைந்து நினைந்து
உன்னில் கலந்திடவே அருள்வாய் ரமணா 
சதா சலித்துச்சளைத்த மனதினிலே
சதாசிவா என்றுனை  ஓர் நொடிப்பொழுதும் இடைவிடாது