Showing posts with label HEMAVATHI. Show all posts
Showing posts with label HEMAVATHI. Show all posts

Saturday, July 28, 2012

UZHAIPADHILA UZHAIPPAI PERUVADHILA INBAM - NADODI MANNAN

http://google.saregama.com/music/pages/listen_popup?mode=listen_popup&query=INH100226900


SONG STARTS @30.00

உழைப்பதிலா உழைப்பைப்  பெறுவதிலா  இன்பம் 
உண்டாவதெங்கே சொல் என் தோழா 
உழைப்பவரே உரிமை பெறுவதிலே இன்பம்
உண்டாகும் என்றே சொல் என் தோழா

கல்வி கற்றோம் என்ற கர்வத்திலே இன்பம்
கண்டவர் உண்டோ சொல் என் தோழா
கல்லாத பேரையெல்லாம் கல்விப் பயிலச் செய்து 
காண்பதில் தான் இன்பம் என் தோழா

இரப்போர்க்கு ஈதலிலும் இரந்துண்டு வாழ்வதிலும்
இன்பம் உண்டாவதில்லை என் தோழா
அரிய கைத்தொழில் செய்து அனைவரும் பகிர்ந்துண்டு
அன்புடன் வாழ்வதின்பம் என் தோழா

பட்டத்திலே பதவி உயர்வதிலே இன்பம்
கிட்டுவதேயில்லை என் தோழா 
உனையீன்ற தாய்நாடு உயர்வதிலே இன்பம்
உண்டாகும் என்றே சொல் என் தோழா