Saturday, September 22, 2012

SINDHU NADHI KARAI - NALLADHORU KUDUMBAM



சிந்து நதிக்கரையோரம் 
அந்தி நேரம்
எந்தன் தேவன் ஆடினான்
தமிழ் கீதம் பாடினான்
எனைப்  பூவைப் போல சூடினான்

சிந்து நதிக்கரையோரம்
அந்தி நேரம்
எந்தன் தேவி ஆடினாள்
தமிழ் கீதம் பாடினாள்
எனைப் பூவைப் போல சூடினாள் 

மஞ்சள் மலர்ப் பஞ்சணைகள்
மன்மதனின் மந்திரங்கள்
கொஞ்சும் குயில் மெல்லிசைகள்
கோதை எந்தன் சீர்வரிசை
சொல்லிக் கொடுத்தேன் கதை கதை
அள்ளிக் கொடுத்தாய் அதை அதை
காதல் கண்ணம்மா 

தெள்ளுத் தமிழ் சிலம்புகளை
அள்ளி அவள் அணிந்து கொண்டாள்
கள்ளிருக்கும் கூந்தலுக்கு
முல்லை மலர் நான் கொடுத்தேன்
வானவெளியில் நிதம் நிதம் (இதம் இதம் )
சோலை வெளியில்  சுகம் சுகம்
காதல் மன்னவா 

சிந்து நதிக்கரையோரம்
அந்தி நேரம்..



No comments: