Monday, April 6, 2009

VELLI PANI MALAIYIN MEEDHULAVUVOM - KAPPALOTTIA THAMIZHAN



வெள்ளிப் பனிமலையின் மீதுலாவுவோம்
அடிமேலைக் கடல் முழுதும் கப்பல் விடுவோம்
பள்ளித் தலமனைத்தும் கோயில் செய்குவோம்
எங்கள் பாரத தேசமென்று தோள் கொட்டுவோம்

வெள்ளிப் பனிமலையின் மீதுலாவுவோம்
அடிமேலைக் கடல் முழுதும் கப்பல் விடுவோம்

முத்துக் குளிப்பதொரு தென்கடலிலே
மொய்த்து  வணிகர் பல நாட்டினர் வந்தே 
நத்தி நமக்கினிய பொருள் கொணர்ந்தே
நம்மருள் வேண்டுவதும் மேற்கரையிலே

வெள்ளிப் பனிமலையின் மீதுலாவுவோம்
அடிமேலைக் கடல் முழுதும் கப்பல் விடுவோம்
பள்ளித் தலமனைத்தும் கோயில் செய்குவோம்
எங்கள் பாரத தேசமென்று தோள் கொட்டுவோம்

ஆயுதம் செய்வோம் நல்ல காகிதம் செய்வோம்
ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம்
ஓயுதல் செய்யோம் தலை சாயுதல் செய்யோம்
உண்மைகள் சொல்வோம் பல வண்மைகள் செய்வோம்

வெள்ளிப் பனிமலையின் மீதுலாவுவோம்
அடிமேலைக் கடல் முழுதும் கப்பல் விடுவோம்
பள்ளித் தலமனைத்தும் கோயில் செய்குவோம்
எங்கள் பாரத தேசமென்று தோள் கொட்டுவோம்

https://www.facebook.com/narayanan.swaminathan/posts/10209407486603908

No comments: