பல்லவி
பூ மேல் வளரும் அன்னையே!
ஒளி பொருந்தும் பொன்னே
இரட்சிப்பாய் என்னையே
செழுங்கமலப் பூ மேல் வளரும்
அனுபல்லவி
காமேவும் மலரினில்
தேமேவும் சுரைநகர்
காட்சியாய் வந்தருள்
மீனாட்சி மணம் பொருந்தும் (பூ மேல் வளரும் )
சரணங்கள்
1.மானே சொக்கேசர் பங்கில் தானே
வளரும் கிருபைவானே
மாமுகன் மயிலின் முருகோனே
தாயென்ன வளர்மீனேர் விழியே
உன்னை நானே மிக வணங்கினேனே
சிதம்பரம் சொல் தேனே
பருகி நிதம் (பூ மேல் வளரும் )
2. வாணி புவி மகிழ் சர்வாணி
மதுரமலர் வேணி மங்சுள வசன சுகபாணி
நித்யகல்யாணி ஐந்தொழிலும் த்ராணி
பெரும் சுந்தர ராணி வேதாகமப் புராணி
அனுதினமும் பூ மேல் வளரும்
3. தாயே த்ரிவித குணமாயே
மலையரசன் சேயே
சந்ததம் எனக்கருள் செய்வாயே
அனைத்தும் நீயே வஞ்சர் மனம் புகாயே
தெரிந்திடாயே நாயேன் செய்பிழை பொறுப்பாயே
அன்பர் இதயப் பூ மேல் வளரும்
No comments:
Post a Comment