Saturday, November 19, 2011

SABARI MALAIYIL - SWAMY AYYAPPAN - TAMIL







சபரி மலையில் வண்ணச் சந்திரோதயம் 
தர்ம சாஸ்தாவின் சந்நிதியில் அபிஷேகம் 
கோடிக் கண் தேடி வரும் ஐயப்பனை 
நாமும் கும்பிட்டு பாடுகின்றோம் என்னப்பனை 

பாலெனச் சொல்லுவது உடலாகும் அதில்
தயிரெனக் கண்டது எங்கள் மனமாகும்
வெண்ணை திரண்டதுந்தன் அருளாகும் இந்த
நெய்யபிஷேகம் எங்கள் அன்பாகும் 

ஏழுகடல் உனதாட்சியிலே வரும் ஐயப்பா இந்த 
ஏழுலகும்  உந்தன்  காட்சியிலே வரும் ஐயப்பா 
ஐயப்பா நீ தான் மெய்யப்பா ஐயப்பா நீ தான் மெய்யப்பா 

வாசமுடைய பன்னீர் அபிஷேகம் எங்கள்
மனதில் எழுந்த அன்பால் அபிஷேகம் 
இனிய பஞ்சாம்ருதத்தில் அபிஷேகம் அதில்
இன்பத்தைக் கூட்டுதையா உன் தேகம் 

ஏழுகடல் உனதாட்சியிலே வரும் ஐயப்பா இந்த 
ஏழுலகும்  உந்தன்  காட்சியிலே வரும் ஐயப்பா 
ஐயப்பா நீ தான் மெய்யப்பா ஐயப்பா நீ தான் மெய்யப்பா 

உள்ளத்தில் வெண்ணை தன்னை கையிலெடுத்து அதில் 
உன் பெயரைக்  குழைத்து நெற்றியில் இட்டு 
உருகும் விபூதியினால் அபிஷேகம் ஹரி ஓம் 
என்று  சந்தனத்தில்  அபிஷேகம் 

ஏழுகடல் உனதாட்சியிலே வரும் ஐயப்பா இந்த 
ஏழுலகும்  உந்தன்  காட்சியிலே வரும் ஐயப்பா 
ஐயப்பா நீ தான் மெய்யப்பா ஐயப்பா நீ தான் மெய்யப்பா 

சபரி மலையில் வண்ணச் சந்திரோதயம் 
தர்ம சாஸ்தாவின் சந்நிதியில் அபிஷேகம் 
கோடிக் கண் தேடி வரும் ஐயப்பனை 
நாமும் கும்பிட்டு பாடுகின்றோம் என்னப்பனை 

ஐயப்பா நீ தான் மெய்யப்பா ஐயப்பா நீ தான் மெய்யப்பா ஐயப்பா நீ தான் மெய்யப்பா 

No comments: