சிந்து நதிக்கரையோரம்
அந்தி நேரம்
எந்தன் தேவன் ஆடினான்
தமிழ் கீதம் பாடினான்
எனைப் பூவைப் போல சூடினான்
சிந்து நதிக்கரையோரம்
அந்தி நேரம்
எந்தன் தேவி ஆடினாள்
தமிழ் கீதம் பாடினாள்
எனைப் பூவைப் போல சூடினாள்
மஞ்சள் மலர்ப் பஞ்சணைகள்
மன்மதனின் மந்திரங்கள்
கொஞ்சும் குயில் மெல்லிசைகள்
கோதை எந்தன் சீர்வரிசை
சொல்லிக் கொடுத்தேன் கதை கதை
அள்ளிக் கொடுத்தாய் அதை அதை
காதல் கண்ணம்மா
தெள்ளுத் தமிழ் சிலம்புகளை
அள்ளி அவள் அணிந்து கொண்டாள்
கள்ளிருக்கும் கூந்தலுக்கு
முல்லை மலர் நான் கொடுத்தேன்
வானவெளியில் நிதம் நிதம் (இதம் இதம் )
சோலை வெளியில் சுகம் சுகம்
காதல் மன்னவா
சிந்து நதிக்கரையோரம்
அந்தி நேரம்..