Tuesday, February 2, 2010

ISAI THAMIZH NEE SEIDHA - THIRUVILAIYADAL




இசைத்தமிழ் நீ செய்த அருஞ்  சாதனை - நீ
இருக்கையிலே எனக்கேன்  பெருஞ் சோதனை - இறைவா


இசைத்தமிழ் நீ செய்த அரும் சாதனை - நீ
இருக்கையிலே எனக்கே பெரும் சோதனை
இசைத்தமிழ் நீ செய்த அரும் சாதனை - நீ
இருக்கையிலே எனக்கே பெரும் சோதனை
இசைத்தமிழ் நீ செய்த அரும் சாதனை


வசை வருமே பாண்டி நாட்டினிலே இறைவா ஆ... ஆ..
வசை வருமே பாண்டி நாட்டினிலே - குழலி
மணவாளனே உனது வீட்டினிலே
வசை வருமே பாண்டி நாட்டினிலே - குழலி
மணவாளனே உனது வீட்டினிலே
உயிர் மயக்கும் நாதப் பாட்டினிலே
உயிர் மயக்கம் நாதப் பாட்டினிலே - வெற்றி
ஒருவனுக்கோ மதுரைத் தமிழனுக்கோ - வெற்றி
ஒருவனுக்கோ மதுரைத் தமிழனுக்கோ


இசைத்தமிழ் நீ செய்த அரும் சாதனை


சிவலிங்கம் சாட்சி சொன்ன கதையும் பொய்யோ - மாமன்
திருச்சபை வழக்குரைத்த முறையும் பொய்யோ?
சிவலிங்கம் சாட்சி சொன்ன கதையும் பொய்யோ - மாமன்
திருச்சபை வழக்குரைத்த முறையும் பொய்யோ?
பிட்டுக்கு மண்சுமந்து பிரம்படி பட்ட உன்னை
பிட்டுக்கு மண்சுமந்து பிரம்படி பட்ட உன்னை
பேசும் தமிழ் அழைத்தும் வாராதிருப்பதென்ன?
பேசும் தமிழ் அழைத்தும் வாராதிருப்பதென்ன?


இசைத்தமிழ் நீ செய்த அரும் சாதனை


தாய்க்கொரு பழி நேர்ந்தால் மகற்கில்லையோ - அன்னை
தமிழுக்குப் பழி நேர்ந்தால் உனக்கில்லையோ
வேருக்கு நீரூற்றி விளைக்கின்ற தலைவா - உன்
ஊருக்குப் பழி நேர்ந்தால் உனக்கின்றி எனக்கில்லை
உனக்கின்றி எனக்கில்லை உனக்கின்றி எனக்கில்லை

No comments: